விசயகலாவிற்கு 50கோடி ஜ.தே.க நட்டஈடு!


தனது அமைச்சு பதவியினை ராஜினாமா செய்வதற்காக ரணிலிடமிருந்து விசயகலா மகேஸ்வரன் 50 கோடி லஞ்சம் பெற்றிருந்ததாராவென்ற விடயம் பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது.

வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றவாளி எனவும் தனது அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவரென தெரிவித்திருப்பதுடன்;  இவருக்கு எம்.பி  பதவி எதற்கு? என்ற வாசகங்களை உள்ளடக்கி சுவரொட்டிகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழ் நகரில்  பரவலாக  ஒட்டப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை (9) காலை குறித்த சுவரொட்டிகள் யாழ் நகரப்பகுதிகள் எங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதுடன்  இந்த சுவரொட்டியை வெளியிட்டவர்கள் நாளைய தலைமுறை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா  மகேஸ்வரனை தமிழ்த்தலைவி என குறிப்பிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர்   சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டிருந்தன.அந்த சுவரொட்டியில்   என்றும் நாம் உங்களுடன்  தமிழ் பேசும் மக்கள் என  பெயரிடப்பட்டு சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த  ஒட்டப்பட்டிருந்தன.

இதற்கு போட்டியாக ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டிகள் ஈபிடிபியால் ஒட்டப்பட்டிருக்கலாமென விசயகலா மகேஸ்வரன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரணிலை இரவு அலரிமாளிகையில் விசயகலா சந்தித்ததா
கவும் அப்போரு ரணில் சிங்களத்தில் உனக்கு விசராவென கண்டபடி திட்டியதாகவும் தெரியவருகின்றது.அப்போது கண்ணீர் மல்க நின்றிருந்த விசயகலாவிடம் 50 கோடி கட்சியிலிருந்து வழங்கப்படுமெனவும் பதவியை ராஜினாமா செய்ய சொன்னதாகவும் கொழும்பு ஊடகப்பரப்பில் பேசப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment