Video Of Day

Breaking News

இரத்த வங்கி முடங்கும் ஆபத்து!

வரலாற்றில் முதல் தடவையாக தேசிய இரத்த வங்கிப் பணிகள் இன்று முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய இரத்த பரிமாற்ற சேவை பணிப்பாளருக்கும் அங்கு பணியாற்றும் அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகலே இதற்கான காரணமாகும்.

நாரஹன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய இரத்த பரிமாற்ற சேவையில் பணியாற்றும் 42அலுவலர்கள், நிலையத்தின் பணிப்பாளர் ருக்ஷான் பெலன்னவை பதவி நீக்குமாறு கோரி வருகின்றனர்.

இன்றைய பணிப்புறக்கணிப்புக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments