இலங்கை

திருகோமலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் நடுவப் பணியகம் திறந்து வைப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்டத்திற்குரிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட நடுவப் பணியகம், 174A, இடதுகரை கீழ் வீதி, திருகோணமலை என்ற முகவரியில் புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த திறப்புவிழா நிகழ்வில் கட்சியின் தலைவர், செயலாளர், திருமலை மாவட்ட அமைப்பாளர், மற்றும் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும்  கலந்துகொண்டனர்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment