டிசெம்பர் தேர்தல் நிச்சயம்!
வடக்கு மாகாணம் மற்றும் சப்ரகமுவ, வட மத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
பழைய தேர்தல் முறையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஆலோசனைக்கு அமைய, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக கூடிய போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
புதிய முறைமைக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமாகாத விடயம் என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து பங்காளிக் கட்சிகளும் மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
Post a Comment