சிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது!
கிளிநொச்சியில் பொதுமக்களால் கொல்லப்பட்ட சிறுத்தை படையினரால் கூட்டில் அடைத்து வளர்க்கப்பட்ட சிறுத்தையென்பது கண்டறியப்பட்டுள்ளது.குறித்த சிறுத்தையின் உடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது அதன் அறிக்கையும் பெறப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையிலேயே சிறுத்தை கூட்டினில் உணவு போடப்பட்டு வளர்க்கப்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த சிறுத்தை படையினரால் முகாமில் வளர்க்கப்பட்டதென பொதுமக்களால் அடையாளப்படுத்தப்பட்டிருந்த போதும் படைதரப்பு அதனை மறுதலித்திருந்தது.அத்துடன் சிறுத்தையினை கொலை செய்ததாக பத்து பொதுமக்கள் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment