இலங்கை

கிளிநொச்சி-கல்மடுவில் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி, கல்மடுப் பகுதியில் ஆண்டு ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்க்கப்பட்டவர் 63 வயதுடைய யாழ்ப்பாணம், கரவெட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுந்தரம் புலேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


குறித்த சடலம் கல்மடு குளத்திலிருந்து மீட்க்கப்பட்டுள்ளது.

சுந்தரம் புலேந்திரன் தொழில் நிமிர்த்தம் வெளியே சென்றவர் வீடு திருப்பவில்லை என அவரது குடும்பத்தினரால் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தர்மபுரம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment