இலங்கை

விஜயகலா சர்சைக்குரிய கருத்து! அடுத்த கட்ட நடவடிக்கையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலங்களை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொிவித்துள்ளனர் கொழும்பை மேற்கோள்காட்டி  செய்தி வெளிவந்துள்ளது.

அத்துடன் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் இதுவரை 25 பேரிடம் வாக்கு மூலம் பதவி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அமைச்சர் வஜிர அபேவர்த்தன, வட மாகாண முலமைச்சர் விக்னேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் சமூர்த்தி அதிகாரிகள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இந் நிலையில் விஜயகலா மகேஸ்வரனிடம் இன்று அல்லது நாளை வாக்குமூலப் பதிவு பெறப்படலாம் என நம்பப்படுகின்றது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment