Header Ads

test

மாணவன் வவுனியா வைத்தியசாலையில் !

வவுனியாவில் மாகாணசபை உறுப்பினரின் மகன் மீது ஆசிரியர் கண்மூடிதனமாக தாக்குதல் மேற்கொண்டதில் மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இச்சமப்வம் குறித்து மேலும் அறியவருவதாவது வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி பயிலும் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா அவர்களின் மகனான தி.கிருஜன்(வயது 15) என்ற மாணவன் பாடசாலையின் 8ம் பாடநேர இறுதி வேளையில் தன் சக மாணவர்களோடு உரையாடிகொண்டு இருந்த வேளையில் செல்வச்சந்திரன் என்ற ஆசிரியர் உரையாடியதை தவறாக நினைத்து குறித்த மாணவர்களை தாக்கியுள்ளார்

இதில் கிருஜன் எனும் மாணவனை தாக்கியதில் குறித்த மாணவனின் தலை அருகிலிருந்த சுவரில் மோதி தலையில் பெருங்காயம் ஏற்பட்டுள்ளது இதனால் பாதிப்புக்குள்ளான மாணவன் வவுனியா பொதுவைத்தியாசலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

இதேவேளை வைத்தியசாலை பொலிஸாரிடம் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

No comments