Header Ads

test

யாழ்.மாவட்ட செயலகத்தில் வாகனங்களைப் பந்தாடிய கன்ரர் வாகனம்



யாழ்.மாவட்ட செயலகத்திற்கு பொருட்களை ஏற்றி இறக்க வந்த ஹன்டர் வாகனம் சாரதியின் தவறால் வேகக்கட்டுப்பாட்டையிழந்து மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் வாகனத் தரிப்பிடத்துக்குள் புகுந்து மோதியதில் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன.

இந்தச் சம்பவம் இன்று (19) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. யாழ்.மாவட்ட செயலகத்துக்கு ஹன்டர் வாகனம் ஒன்றில் பொருள்கள் (கிராம சேவையாளர்களுக்கான பைகள் உள்ளிட்டவை) ஏற்றிவரப்பட்டன.

உத்தியோகத்தர்களின் வாகனத்தரிப்பிடத்துக்கு அருகின் ஹன்டர் வாகனத்தை நிறுத்த சாரதி திட்டமிட்டுள்ளார். வாகனத்தின் பிரேக்கை அமர்த்துவதற்கு பதிலாக அச்சிலேற்றரை சாரதி மாற்றி அழுத்தியதால் வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து உத்தியோகத்தர்களின் வாகனத் தரிபிடத்துக்குள் புகுந்தது.

சாரதியின் கவயீனத்தால் இந்த விபத்து ஏற்பட்டது. உத்தியோகத்தர்களின் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன. அவற்றில் பல பெண் உத்தியோகத்தர்களின் மோட்டார் சைக்கிள்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

No comments