ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் அனுமதி
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, வரும் 29-3-2019-க்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே மும்முரம் காட்டி வருகிறார்.
இனி வரும்காலங்களில் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த மக்கள் பிரிட்டனுக்குள் வருவதானால் விசா நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டி இருக்கும் என பரவலான கருத்து நிலவிய நிலையில், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து வருபவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய விசா தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவுக்கு சட்ட வடிவம் கொடுக்கும் மசோதா மீது பிரிட்டன் பாராளுமன்றத்தில் பல மாதங்களாக விவாதம் நடைபெற்று வந்தது. மசோதாவை ஆதரித்தும், எதிர்த்தும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காரசாரமாக உரையாற்றினர்.
இந்நிலையில், 1972-ம் ஆண்டில் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைவது தொடர்பாக உருவாக்கப்பட்ட சட்டத்திற்கு மாற்றாக ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் சட்டம் நேற்று செய்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டதும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் அவையில் மேஜைகளை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

Post a Comment