Header Ads

test

நைஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் செல்லும் ஆர்ஜென்ரினா அணி

 உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் லீக் ஆட்டத்தில் பெரு, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டென்மார்க், பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லீக் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து மூன்றாவது லீக் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜெண்டினா, நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை செய்தன.

இரு அணிகளும் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கின. அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் இரண்டு லீக் போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்த போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.

இப்போட்டி தொடங்கியதில் இருந்தே அர்ஜெண்டினா வீரர்கள் பந்தை முடிந்த அளவு தங்கள் வசமே வைத்திருந்தனர். 14-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மெஸ்சி சிறப்பான முறையில் ஒரு கோல் அடித்தார். இதனால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

அதன்பின், முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் நைஜீரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நைஜீரியா வீரர் விக்டர் மோசஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.

அதன்பின் 87-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மார்கஸ் ரோஜோ கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா அணி 2-1 என முன்னிலை பெற்றது.

No comments