கதிரையில் ஏறிநின்று கரண்ட் கம்பியைத் தொடவேண்டாம் - தர்சானந்திற்கு எச்சரிக்கையாழ் மாநகரசபையின் கடந்த அமர்வின்போது மாநகர முதல்வரினால் உறுப்பினர் ப.தர்சானந்த கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.

புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவேற்றுவதை மட்டுமே அரசியலாகச் செய்துவருகிறார் யாழ் மாநகரசபையின் கந்தர்மடம் மேற்கு 02 ஆம் வட்டாரத்தின் உறுப்பினரான பரமலிங்கம் தர்சானந். இவரது வட்டாரத்தில் கடந்த வாரம்  மின் அத்தியட்சகர் பிரிவினரால் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றினை தான் பொருத்துவது போல படம் எடுத்து முகநூலில் பதிவேற்ற ஆசைப்பட்ட அவர் கதிரை ஒன்று வைத்து கதிரையில் ஏறி நின்றி மின்குமிழ்களின் ஆளிகளை தான் பொருத்துவது போல படம் எடுத்து முகநூலில் பதிவேற்றினார்.

அவர் போலித்தனத்திற்காக அவ்வாறு செய்திருந்தாலும் ஒரு உறுப்பினர் அவ்றாறு செய்தல் சட்டரீதியான குற்றம் அவரது உயிருக்கு ஏதும் நடந்தால் யார் பொறுப்பு என அச் சம்பவம் தொடர்பில் பலரினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.


இந்நிலையில் குறித்த விடயம் யாழ் மாநகரசபையின் கவனத்துக்குக் கொண்டுவரப்படவே கடந்த அமர்வின்போது கதிரையில் ஏறி நின்று ஆளியைப் பிடுங்குவது, கரண்ட் கம்பியைத் தொடுவது போன்ற செயற்பாடுகளில் உறுப்பினர்கள் ஈடுபடவேண்டாம். அவ்வாறு ஈடுபட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஆனோல்ட்டினால் எச்சரிக்கப்பட்டார்.

Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment