Header Ads

test

சிறுமி கொலையாளிகள்:விசயகலா ஆதரவாளர்கள்?

சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் நேற்று முந்தினம் (25) படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் இறுதிக் கிரியைகள் நேற்று (26) மாலை இடம்பெற்றிருந்தது.ஆனால் அதே கிராமத்தை சேர்ந்த வடமாகாண சிறுவர்,மகளிர் விவகார அமைச்சரான அனந்தி சசிதரனோ இலங்கை அரசின் ராஜாங்க அமைச்சரான விசயகலா மகேஸ்வரனோ இறுதி அஞ்சலி செலுத்துவதிலும் சரி கொலையை கண்டிப்பதிலோ சரி அக்கறை காட்டமை கேள்விகளை தோற்றுவித்துள்ளது.அதிலும் பெண்களாகவும் பெண்குழந்தைகளது தாயாரகவும் உள்ள அவர்கள் இவ்விடயத்தில் காட்டிய கள்ள மௌனம் பலத்த சந்தேகத்தை மக்களிடையே எழுப்பியுள்ளது.


சிறுமியில் வீட்டில் இடம்பெற்ற வணக்க வழிபாடுகளைத் தொடர்ந்து உடலம் சுழிபுரம் – திருவடிநிலை மயானத்தில் புதைக்கப்பட்டது.

இறுதிக் கிரியைகளில் பிரதேச மக்கள், காட்டுப்புலம் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணி கே.சுகாஸ் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை மாணவியின் கொலைக்கு பின்னர் இறுதி நிகழ்வில் கூட.  வித்தியாவைக் கொடூரமாகக் கொன்ற  கொலைக் குற்றவாளியான சுவிஸ்குமாரை தப்ப வைத்த மகளீர் விவகார அமைச்சர் விஜயகலா  மகேஸ்வரன்  இந்த பிரதேசத்தை சேர்ந்தவராக இருந்த போதும் இதுவரை அங்கு சென்று ஆறுதல் தெரிவிக்கவோ பார்வையிடவோ செல்லவில்லை.
இதே வேளை குறித்த சிறுமியைக் கொடூரமாகக் கொன்ற கொலையாளிகள் குறித்த அமைச்சரின் ஆதரவாளர்கள் என சொல்லப்படுகின்றது.

தேர்தல்காலத்தில் குறித்த அமைச்சருக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டித்திரிந்தவர்கள் எனவும் பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்களெனவும்; தெரியவருகின்றது.

அதேபோன்று வடமாகாண முதலமைச்சரும் சரி மகளிர்,சிறுவர் விவகார அமைச்சரான அனந்தியும் சரி சிறுமி படுகொலையினை கண்டுகொள்ளவில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.  

No comments