Header Ads

test

பாடசாலை விடுதியில் மாணவன் தற்கொலை!

யாழ்ப்பாணத்தின் தீவக கல்வி வலயத்துக்கு உட்பட்ட வேலணை மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் இன்று  பாடசாலை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
குறித்த பாடசாலையில் விடுதி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் புலம்பெயர் பழைய மாணவர்களின் நிதிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில்  பாடசாலை அதிபரால் இவ்விடுதி நடத்தப்ப்டுள்ளது.

பாடசாலையின் - அதிபர் வடமாகாண ஆளுநரின் செயலாளருடனான உறவுகாரணமாக ஒழுக்காற்று நடவடிக்கைகளிற்கு உள்ளாகாது இருந்துவருவதாக சொல்லப்படுகின்றது.

மாணவனின் தற்கொலைக்கான காரணம் தெரியவராத போதும் அண்மைக்காலமாக சிறுபராயத்தினரிடையே அதிகரித்துள்ள தற்கொலை மனோநிலை மோசமானதொரு சூழலை தோற்றுவிக்குடிமன அஞ்சப்படுகின்றது.

No comments