Header Ads

test

அமெரிக்காவில் செய்தி நிறுவத்தில் துப்பாக்கிச் சூடு! 4 பேர் பலி! வெள்ளை மாளிகை கண்டனம்

அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தின் அன்னாபோலிஸ் பகுதியில் ‘தீ கேப்பிட்டல்’ எனப்படும் தனியார் செய்தி நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் அப்பகுதிக்கு வந்த ஒரு நபர் அலுவலத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்?, எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார்? என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு வெள்ளை மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘அப்பாவி பத்திரிகையாளர்கள் பணியில் இருந்தபொது நடத்தப்பட்ட தாக்குதலானது, ஒவ்வொரு அமெரிக்கர் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள், உறவினர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்’ என வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் சாரா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

No comments