கவிதை

முள்ளி வாய்க்கால் முடிந்துபோன.. அத்தியாயமல்ல!


முள்ளி வாய்க்கால் முடிந்துபோன.. அத்தியாயமல்ல

 நம்மவர் மூச்சுக்காற்றில் கலந்துநிற்கும் வலி(ழி)யின் புத்தகம்.

 புதுமாத்தளன் புரட்டிப்போட்ட பக்கங்கள் நம்மவர் இதயங்களில் நிலையாக இருண்டுபோய் இருக்கும்ரணங்கள்!

 கலைந்துபோகும் மேகக்கூட்டம்போல ஒருமனிதக்கூட்டம் கரைந்துபோன சாட்சிகளில் இருந்து எழுதுகிறேன்!

 சொல்லனா துன்பங்கள் சங்கிலித்தொடராகதொடரும்போதும் நிறுத்தப்பட்ட உங்கள் மூச்சுக்களை நாங்கள் சுவாசிக்க ஆரம்பித்துள்ளோம்

 மூன்று தசாப்த்தங்களின் முழுவீரியத்தையும் விழுங்கிச்சென்ற முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மாற்றத்திற்கானமுள்ளுள்ள நினைவேந்தல்!

 புத்தபகவானின் நெறிமறந்த பக்ஸப் புத்திரர்களின் ஈனப்படுகொலைகள் வலி(ழி)யும், கண்ணீரும் தந்துநின்றாலும் -மாறாக தோல்வியின் தன்மையை உணரத்தந்துள்ளது!

 போராடுவதற்காக ஒன்றுபடுவோம்

ஒன்றுபடுவதற்காக போராடுவோம்

உறைந்துகிடக்கும் உங்கள்குருதியில் சபதம்ஏற்கின்றோம்

 உங்கள்மரணம்முடிவல்ல!

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment