Header Ads

test

சாட்சிகள் இல்லை:சத்தியலிங்கம் சுற்றவாளியானார்?

வடக்கு மாகாண சுகாதாரத அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது சகோதரனின் ஊடாக மருத்துவ உபகரண கொள்வனவில முறைகேடாக வருமானம் பார்த்த விவகாரம் பற்றி உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள வைத்தியசாலைகளிற்கு மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது அதனை சிபார்சு செய்வதற்கான பேரம் பேசலில் மில்லியன்களில் தனது தனிப்பட்ட செயலாளராக இருந்து வந்திருந்த சகோதரன் மூலம் அவர் வருமானம் பார்த்தமை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனிடையே அரசியல் உள்நோக்கத்துடனேயே அமைச்சரவையிலிருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அப்போது எடுத்து வெளியேற்றிவிட்டதாக சத்தியலிங்கம் தெரிவித்துமிருந்தார்.

எனினும் தன்மீதான குற்றச்சாட்டுக்களினை நிரூபிக்க முதலமைச்சரிடம் சான்றாதாரங்கள் இல்லையென்பதை ஒரு வருடத்தின் பின்னர் அறிந்துகொண்டுள்ள சத்தியலிங்கம் அண்மைக்காலமாக தன்மீது மீள விசாரணை நடத்த கோரிவருகின்றார்.

இதன் மூலம் அடுத்த மாகாணசபை தேர்தலிற்கு முன்னதாக புனிதராக தன்னை மாற்றிக்கொள்ள அவர் முற்பட்டுள்ளார்.

அவ்வகையிலேயே தற்போது கடந்த மாகாணசபை அமர்வில் தனது சகபாடியான அவைத்தலைவர் மூலம் வெள்ளையடிக்க சத்தியலிங்கம் குற்றமற்றவரெனவும் அவர் மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே இன்னும் மூன்று மாத ஆயட்காலத்தை மட்டுமே கொண்டிருக்கின்ற நிலையில் அடுத்த தேர்தலிற்கான ஏற்பாடுகளிலேயே தமிழரசுக்கட்சி அக்கறை காட்டிவருகின்ற நிலையில் அதனுடன் இணைந்து கொண்ட டெனீஸ்வரன் போன்றவர்களை கண்டுகொள்ளாது சத்தியலிங்கத்திற்கு வெள்ளையடிக்க மும்முரம் காட்டப்பட்டுவருகின்றது. 

No comments