தொடரும் இனஅழிப்பிலிருந்து எமது இனத்தைப் பாதுகாப்போம்!
உலகிலுள்ள மனித இனம் முழுவதும் விழித்திருக்க, அவர்களின் கண்முன்னேதான் முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்பட்டனர். உலகநாடுகளால் தடைசெய்யப்பட்ட போர்க்கருவிகளாலும், வெடிபொருட்களாலும் தமிழினம் தாக்கப்பட்டு, நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது.
இந்த இனஅழிப்பு படுகொலை நிகழ்ந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்னமும்
சொல்லவொண்ணாத் துயரத்துடனும், தீராத வலிகளுடனும் தமிழ்மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின-;றார்கள். உறவுகளின் உயிர்இழப்புகளுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரம், உறுப்புகளை இழந்தவர்களின் கதி, போர்க்களத்தில் நின்று, இன்று வாழ்வோடு போராடும் முன்னாள் போராளிகளின் நிலை என்பன மிகத்துயரமாக எம்மை வருத்திக்கொண்டிருக்கின்றன.
இந்த துயரமும் வலியும் எவராலும் எவற்றாலும் ஆற்றமுடியாதவையாக இருக்கின்றன. சிறைகளில் வதையும் தமிழ் அரசியற்கைதிகளின் நிலை சொற்களில் வடித்திடமுடியாதது.
எமது இனத்தின் துயரத்தை உலக மனச்சாட்சியின்முன் நீதிகோரலுக்கான கேள்வியாக உரத்த குரலில் நாங்கள் முன்வைத்திருக்கின்றோம். எமது இந்தக்கேள்வி உலக மனச்சான்றுக்கு அழுத்தம் கொடுப்பதாக இருக்கின்றது.
இந்நேரத்தில் உலகஅரங்கில் தனக்கு ஏற்பட்டிருக்கும் போர்க்குற்றக் கறையை இல்லாமற் செய்வதற்காக, முள்ளிவாய்க்காலில் நடத்திய இனஅழிப்பை தமிழ்மக்களின் நினைவில் இருந்து அகற்றிவிடவேண்டும் என்பதையே இலக்காக கொண்டு தற்போதைய அரசு செயற்பட்டு வருகிறது.
ஒருபுறத்தே தமிழ்மக்கள் இயல்பாக வாழ்வதாக உலகிற்கு காட்ட முற்படும் அரசு, மறுபுறத்தே தொடர்ந்து தமிழினஅழிப்பை மறைமுகமாக முன்னெடுத்துச் செல்கிறது.
தமிழினத்தின் இளையோரின் நுண்ணறிவுத் திறனை மழுங்கடிப்பதும், தமிழினத்தின் அடையாளங்களை சிதைப்பதுமாக பல பூடகமான நடவடிக்கைகளை சிங்கள அரசு மேற்கொள்கின்றது.
கண்துடைப்பு நடவடிக்கையாக அற்பசொற்ப உதவிகளை வழங்கி, அரசு தமிழ்மக்கள் மேல் அக்கறைகொண்டுள்ளதாக உலகிற்கு காட்டிக்கொண்டு, நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீகநிலத்தை மேன்மேலும் வன்பறிப்பு செய்துகொண்டிருக்கின்றது.
இதற்காகவே சிங்கள இனத்தின் பண்பாட்டு நிகழ்வுகளை எமது நிலத்தில் நடத்துகிறது.
அத்துடன் தமிழ் இளையோரை சிங்களமயப்படுத்தும் நோக்கில் தமிழ்ப்பாடசாலைகளில் சிங்கள மொழியை பாடமாக்கியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை முன்வைத்து தாம் நல்லாட்சி அரசு நடத்துவதாக உலகநாடுகளை நம்பவைக்கின்றது. பல உலகநாடுகளின் நல்லாசிகளுடனும், ஒத்துழைப்புடனும் தான் தமிழ்மக்களின் உன்னத வாழ்வு முள்ளிவாய்க்காலில் நசுக்கி ஒடுக்கப்பட்டது என்பதை ஒருபோதும் நாம்
மறந்துவிடமுடியாது.
முள்ளிவாய்க்காலில் உயரிழந்த உறவுகளை நினைவு கூறவும், எமது இனத்தின் மீதான அழிப்பு மன்னிக்க முடியாத போர்க்குற்றமே. என்பதை உலக நாடுகளின் மனச்சாட்சியின்முன் எடுத்துக்காட்டவும் வேண்டியுள்ளது.
அத்துடன் எமது இனத்தின் தன்னாட்சி உரிமைiளையும், இறைமைகளையும் பாதுகாக்கவேண்டிய கடமையும் எம்முன்னால் உள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு தமிழ்மக்களாகிய நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போமாக.
நன்றி
சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட இனப்படுகொலையை மூடிமறைத்து, தமிழ் மக்களின் உணர்வுகளை மழுங்கடித்து, தமிழ்மக்கள் மத்தியிலும் , இளையவர்கள் மத்தியிலும் தங்களை குற்றமற்றவர்கள் போல் காட்ட தமிழீழமெங்கும் உதவி என்ற பெயரில் மடைமாற்றம் செய்யும் சிறிலங்கா இராணுவத்தினர்.
ஆதாரங்கள் கீழே!!!
Post a Comment