Header Ads

test

நீதிபதியையே ஏமாற்றிய முடியப்பு ரெமீடியஸ்?


யாழ். ரயிலில் பயணித்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட  ரயில்வே  அதிகாரியை காப்பாற்ற சட்டத்துறையை தவறாக வழி நடத்த ஈபிடிபியின் யாழ்.மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ரெமீடியஸ் முனைந்திருக்கின்றமை அம்பலமாகியுள்ளது.

குளிரூட்டப்பட்ட அதி சொகுசு கடுகதி புகையிரதத்தில் கொழும்பு,கோட்டையில் இருந்து காலை 05:30 க்கு புறப்படுவது வழமையாகும். அதில் வகுப்புக்கள் தனித்தனியாக இல்லாதிருப்பதுடன் எல்லா ஆசனங்களுமே முதலாம் வகுப்பு மட்டுமேயாகும்.

இந்நிலையில்  ரயில்வே  அதிகாரியை காப்பாற்ற சட்டத்துறையை தவறாக வழி நடத்தி ஈபிடிபியின் யாழ்.மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ரெமீடியஸ் 3ம் வகுப்பு ஆசனத்தை பெற்றுவிட்டு 2ம் வகுப்பு ஆசனத்தில் பயணித்தமையே பிரச்சினைக்கு காரணமென விளக்கமளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் காவல்துறை ஆட்சேபனை தெரிவிக்காமையால் குறித்த ஊழியர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த ஊழியரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என இ.தொ.கா உப தலைவரும் ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தமிழ் பெண்களையோ அல்லது தமிழர்களையோ இழிவான வார்த்தைகளால் கொச்சைப்படுத்தி பேசவும் இனவாத சிந்தனையில் அடக்கு முறையைப் பிரயோகிக்கவும் எவருக்கும் உரிமை கிடையாது என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு தமிழர்கள் மீது இழிவான முறையில் நடந்து கொள்ளவும், தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்கவும் எவருக்கும் உரிமை கிடையாது.தமிழ் மக்கள் வேறு எந்த இனத்தவர்க்கும் தரம் தாழ்ந்தவர்களில்லை.
இந்த ரயில் அதிகாரி மது போதையில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த அதிகாரியின் செயற்பாடானது ஒவ்வொரு தமிழரினதும் தன்மானத்தை உரசிப் பார்ப்பதாக உள்ளது.
இத்தகைய இனவாதம் கொண்ட அதிகாரியை பணியிலிருந்து இடைநிறுத்தி பக்கச்சார்பற்ற உடனடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தகுந்த ஆதாரங்களுடன் அவரைப் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
அரசாங்கம் இதிலிருந்து தவறும் பட்சத்தில் மலையக ரயில் சேவைகளை ஸ்தம்பிக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments