Header Ads

test

ஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''

ஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் கணிப்பு.

அறிவார்ந்த அற்புதங்கள் உறைந்த இடம்
ஆயிரமாயிரம் மேதைகள் வாழும் வாசல்தலம்
அன்னையர் பலர் கூடி அன்பையும் அறிவையும் ஊட்டிடும் ஆலயம்

ஆசான்களின் வழித்தடங்களாய், பின்தொடரும் சீடர்களின் வழிகாட்டிகள் வாழுமிடம்

எத்தனை நூல்கள் என்பதை விட எத்தகைய அறிவாளிகளின் படைப்புகள் இங்கு இருந்தன என்பதே மகத்துவம்

உலக அறிவொளிக்கு தீயிட்ட பரம்பரை தான் இந்த சிங்கள நாதாரிகள்
இவர்கள் இப்போது நல்லாட்சி நடத்துகிறார்களாம்
இதுதான் சாணக்கிய ஏமாற்றம்

எமது மூதாதையர் சிறுக சிறுக சேர்த்த அரும்பெரும் பொக்கிசத்தை
ஒரே நாளில் நள்ளிரவில் கபடத்தனமாக எரித்தவனை நம்பி வாழலாமா?

தமிழர் அறிவுச்சோலையை தீயிட்ட பின்பே
தமிழீழ தேசம் வலுப்பெற்றது
தமிழ்த்தேசிய இராணுவம் நிலை கொண்டது
சிங்களவருடன் சேர்ந்து வாழ முடியாது என்ற கருத்துருவாக்கம் எழுந்தது

ஓ சிங்கவனே!
எத்தனை படுகொலைகள நீ செய்தாய் என்பதை நீ மறக்காலாம்
நாம் மறப்பதாக இல்லை
அச்சிட்ட கணக்குப்படி இருநூறுக்கும் மேற்பட்ட கூட்டுக்கொலைகளில் அப்பாவி தமிழர்களை கொன்றிருக்கிறாய்
அத்தனையும் ரத்த கண்ணீர் வரும் நீண்ட நெடிய வலி
பழி தீர்க்கும் காலம் வரும்
திடமாக இரு

தரைப்படை கடற்படை வான்படை கட்டி ஆண்ட
எங்கள் அண்ணன்
உங்கள் சிங்களதேசத்தின் அறிவாலயங்களை தாக்கிய வரலாற்றுண்டா..?
அது முடியாத செயலல்ல என்பதை
கட்டுநாயக்காவும்
அனுராதபுர வான்படை தாக்குதலும் சொல்லும்

உலகத்தை புரட்டிப்போட்ட கிட்லர் கூட தன் படைகளுக்கு இட்ட கட்டளை
போரிடும் போது நூலகங்கள் தாக்கப்படாது பாதுகாக்கப்பட வேண்டும் என்று
சிங்களத்தின் அறிவில் ஏதோ குறைபாடு இருக்க வேண்டும்
இக்கீழத்தர அழிவை அரங்கேற்ற

இனப்படுகொலைக்கு ஆதாரம் கேட்கும் சாணக்கிய அரசியியல்வாதிகளே!
யாழ்நூலக எரிப்பு தொடர்பாய் எங்காவது நீதிகேட்டு பேசியிருப்பீர்களா..?

இனப்படுகொலையின் உச்சம் யாழ்நூல அழிவின் எச்சம்

உணர்ந்திடு தமிழா!
முள்ளிவாய்க்கால் தமிழரின் சாக்களமாய் ஆன வலியிலும் வலியே
யாழ்நூலக எரிப்பின் வலி

நல்லாட்சி கபட நாடகத்தில் தமிழருக்கும் பங்குண்டு
இனப்படுகொலை ஒவ்வொன்றுக்கும் தமிழ் அரசியியல்வாதிகளின் கரமும் நீண்டிருக்கு
ஏனெனில் இதுவரை காலமும் எந்த தமிழ் அரசியியல்வாதியும் எமக்கான நீதியை கேட்கவில்லை

தமிழினமே!
எமக்கான அழிவுப்பாதையிலிருந்து தப்பித்துக்கொள்ள
எதிர்கால அரசியியலை ஆயுதமாக கொள்
நாடக பேச்சில் மயங்காது
நீடித்து தமிழினம் வாழும் பாதையை உருவாக்கு


No comments