யாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோவில் வீதி நல்லூரை சேர்ந்த 27 வயதான மருதமுத்து கோவிந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சித்த சுவாதீனமற்றவராக காணப்பட்ட இவர் நேற்று முன் தினம் வீட்டில் இருந்து காணாமல் போன நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த வாரமும் காணாமல் போயிருந்த பிரபல நாதஸ்வர வித்துவான் ஒருவர் ஜமுனா ஏரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment