Header Ads

test

சற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்!


வவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்திற்கு முன்பாக மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 கடந்த வாரம் நகரசபை தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோர் சிறைச்சாலைக்கு அருகிலுள்ள நீதிமன்றத்தின் வாகனத்தரிப்பிடத்திற்கு என ஒதுக்கப்பட்ட வெற்றுக்காணியைப்பார்வையிடச் சென்றுபோது அங்கு நின்றிருந்த சிறைக்காவலர் ஒருவரினால் நகரசபை தலைவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தது இதையடுத்து குறித்த சிறைக்காவலருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டபோதிலும் அது நடைபெறவில்லை

 இதையடுத்து இன்று காலை வவுனியா நகரசபை மைதானத்திற்கு முன்பகாக ஒன்றினைந்தவர்களினால் நகரசபை தலைவர், செயலாளரை அவமதித்த சிறைக்காவலர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவிலியுறுத்தி மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான ம. தியகராசா, இ. இந்திரராசா வவுனியா நகரசபை உப தலைவர், வவுனியா செட்டிகுளம் பிரதேசபை தலைவர், உறுப்பினர்கள், தமிழ் தெற்கு பிரதேசபை தலைவர், உறுப்பினர்கள், வவுனியா வடக்கு நெடுக்கேணி பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள், முச்சக்கரவண்டிசாரதிகள் கலந்துகொண்டதுடன் வவுனியா நகரசபை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறைக்காவர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதுடன் அவர் நகரசபை தலைவர், செயலாளரிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் கோசமிட்டனர்.

No comments