வரட்சியின் காரணமாக யாழ்ப்பாணத்தில் வெங்காயம் உட்பட்ட 1980 ஹெக்டேயர் பயிர்ச் செய்கை பரப்பு முற்றாக அழிவடைந்துள்ளது.
இளவாழை, மாதகல் மற்றும் உறும்பிராய் பகுதிகளில் வெங்காய பயிர்ச் செய்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரட்சியால் தமது பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தம்மால் பெறப்பட்ட வங்கிக்கடன்களை செலுத்துவதற்கு நிவாரணங்கள் பெற்றுத்தருமாறு குறித்த பகுதிகளை சேர்ந்த விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
விவசாயிகள் குறித்த விளை நிலங்களில், கடந்த வருடம் உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கையில் ஈடுபட்டதாகவும் உரிய காலத்தில் விதை உருளைக்கிழங்குகள் கிடைக்காமை காரணமாக இந்த வருடம் அவர்கள் மாற்றுபயிர்ச் செய்கையாக வெங்காயத்தை பயிரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துகள்:
Post a Comment