Header Ads

test

20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் பயிற்சி!

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் அவசியத்தினை கருத்திற் கொண்டு 45 வயதுக்கு உட்பட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வேலையினை பெற்றுக்கொடுப்பதற்காக நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 5,000 பட்டதாரிகள் 2018ஆம் ஆண்டு ஜுலை மாதத்திலும், 15,000 பட்டதாரிகளை 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும் பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
 
பயிற்சி காலத்தில் அவர்களுக்கு 20,000 கொடுப்பனவினை மாதாந்தம் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனையோர் 2019ஆம் ஆண்டில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். அதனடிப்படையில், குறித்த பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதற்கும், பின்னர் தகைமை பெறுகின்ற பட்டதாரிகளை அபிவிருத்தி அதிகாரிகள் யாப்பின் கீழ் காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கு இணைத்துக் கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments