Video Of Day

Breaking News

தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அஞ்சலி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 தமிழர்களின் ஆத்மா சாந்தி வேண்டி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று மாலை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
 
கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வாளாக கலைப்பிரிவு ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்வில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

No comments