Header Ads

test

மதவாச்சியில் காட்டு யானை தாக்கி பெண் மரணம்!

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதவாச்சி, கரம்பன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது வீட்டு முற்றத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போதே யானை வந்து தாக்கியுள்ளது என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த பெண் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிற்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் வைத்தியசாலையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.


No comments