சமஸ்டியை உருவாக்க இணங்கி விட்டார் ரணில்! - சரத் வீரசேகர
இலங்கையை சமஸ்டி நாடாக உருவாக்கும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நிபந்தனைகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கியுள்ளார் என்று முன்னாள் கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நிபந்தனைகளுக்கு பிரதமர் எழுத்துமூலம் இணங்கியதாக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது நாட்டை காட்டிக்கொடுக்கும் செயலாகும் என்றும் விமர்சித்துள்ளார்.
Post a Comment