Video Of Day

Breaking News

ஐதேகவுடன் பேச சரத் அமுனுகம தலைமையில் குழுவை நியமித்தது சுதந்திரக் கட்சி


ஐதேகவுடன் இணைந்து தொடர்ந்தும் கூட்டு அரசாங்கத்தை முன்னெடுப்பது பற்றிய பேச்சுக்களை நடத்துவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது பிரதிநிதியாக கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான குழுவை நியமித்துள்ளது. சிறிலங்கா அதிபரும், பிரதமரும் கூட்டு அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையிலேயே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐதேகவும் இணைந்து புதிய கொள்கைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் கூட்டு அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையை அமைக்கத் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்துப் பேசவே, கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான குழுவை சிறிலங்கா சுதந்திரக் கட்சி நியமித்துள்ளது.

No comments