Header Ads

test

இரு மணி நேரம் வவுனியாவில் தரித்து நின்ற தொடருந்து

வவுனியா தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று இரண்டு மணி நேரம் தரித்து நின்றுள்ளது. இதனால் தொடருந்தில் பயணித்த பயணிகள் பெரும் அசோகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று சனிக்கிழமை (28.04.2018) வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி அதிகாலை 5.45 மணிக்கு செல்லும் நகர்சேர் கடுகதி தொடருந்து இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வவுனியா தொடருந்து நிலையத்தில் இரண்டு மணி நேரம் தரித்து நிறுத்தப்பட்டது.

அனுராதபுரத்திலிருந்து தொடருந்தின் இழுவை இயந்திரம் வரவழைக்கப்பட்டு காலை 7.45 மணியளவிலே தொடருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டது.

பயணிகள் சுமார் 2மணித்தியாலயம் அசோகரியங்களுக்கு உள்ளாகிய காந்திருந்து பயணத்தைத் தொடருந்தனர்.

No comments