Video Of Day

Breaking News

புதையல் தோண்டத் தயாரான 8 இளைஞர்கள் இரு ஸ்கானருடன் கைது!

வவுனியாவில் புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் வேனில் காத்திருந்த எட்டு இளைஞர்களை வவுனியா பொலிஸார் இன்று  அதிகாலை 5.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.
தென்பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் சிற்றூர்த்தியில் சென்ற 33 , 32, 31 , 44 , 59 வயதுடைய காலி , கிளிநொச்சி, கொழும்பு , அனுராதபுரம் , யாழ்ப்பாணம் பகுதியினை சேர்ந்த  எட்டு இளைஞர்கள் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே சிற்றூர்த்தியுடன் தரித்து நின்ற சமயத்தில் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட காவல்துறையினர் குறித்த வாகனத்தினை சோதனையிட்ட போது வாகனத்திலிருந்து இரு ஸ்கானர் இயந்திரத்தினை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கைப்பற்றப்பட்ட இரு ஸ்கானர் இயந்திரம் , அவர்கள் பயன்படுத்திய சிற்றூர்த்தி , எட்டு சந்தேக நபர்களையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



No comments