கதிர்காமத்துக்கு யாத்திரைகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் பயணித்த 17 யாத்திரிகள் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விபத்து தெற்கு அதிவேக வீதியில் இன்று சனிக்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது.
எல்பிட்டியில் இருந்து கதிர்காமம் யாத்திரைக்காக சென்ற பேருந்தே விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்தவர்கள் பத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments :
Post a Comment