Header Ads

test

கூட்டமைப்பு மீது ஊடகங்களிற்கு சீற்றமாம்: மாவை!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீது ஊடகங்களுக்குள்ள காழ்ப்புணச்சி காரணமாகவே தமிழ்தேசிய கூட்டமைப்பு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டு சேர்ந்து விட்டதாக பொய்யான செய்திகளை வெளியிடுகின்றனவென நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.


உள்;ளுராட்சி சபை தேர்தலின் பின்னான நிலைமைகள் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறியிருந்ததாவது, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை உண்i மயானதே. ஆனால் நாம் அவர்களுடன் கூட்டு சேர்ந்து விட்டோம் என கூறுப்படுவது பொய்யான ஒரு கருத்தே ஆகும்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை ஒட்டுகுழு என்றோ, துரோகிகள் என்றோ கூறியதில்லை என்றே கூறியிருந்தேன் ஆனால் ஊடகங்கள் அதற்கு பல வடிவங்களை கொடுத்து செய்தியாக்கி உள்ளன.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் ரெலோ அமைப்பே முதலில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருந்தனர். பின்னர் நான் ஒருதடவை பேசவேண்டும் என்பதற்காகவே நான் பேசினேன். அதற்காக அவர்களுடன் கூட்டு சேர்ந்ததாக அர்த்தப்படாது.
யாழ்.மாநகரசபையில் ஆட்சியை கைப்பற்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சி முயற்சித்தது. இதற்காக தமிழ்தேசிய மக்கள் முன்னணியிடமும் அவர்கள் ஆதரவு கேட்டதாக அறிந்தேன். பின்னர் அது சாத்தியமற்று போனதாலேயே அவர்கள் அந்த முயற்சியை கைவிட்டார்கள்.
பின்னர் வேலணை பிரதேச சபையில் அதிக ஆசனங்களை நாங்கள் பெற்றுள்ளபோதும் அவர்கள் ஆட்சியை கைப்பற்றி எங்களை தோற்கடித்தார்கள். ஆகவே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் நாம் கூட்டு சேர்ந்ததாக வெளியாகும் செய்திகள் பொய்யானவையென மாவை தெரிவித்துள்ளார்.


No comments