
“நீதித்துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்ட மூத்த நீதிபதிகள் மட்டுமே இச்சிறப்பு நீதிமன்றத்தை வழிநடத்த தகுதி வாய்ந்தவர்கள். முன்னர், இந்த ஆட்கடத்தல் வழக்குகள் சாதாரண வழக்குகளாக நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும். இனி, இந்த சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் ஆட்கடத்தல் வழக்குகளை மட்டுமே விசாரிப்பார்கள். அதனால் தான் இவ்வழக்குகள் ஒன்பது மாதங்களுக்குள் நிறைவுப்பெறும் என நம்புகிறோம்ம். கடந்த ஆண்டு, ஆட்கடத்தல் தொடர்பான 282 வழக்குகளில் 147 பேருக்கு தண்டனைக்கும் 676 பேர் கைதுக்கும் உள்ளாகியுள்ளனர்” என தனது உரையில் நீதிபதி ஷரிப் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து- மலேசிய எல்லையில் கடந்த 2015ம் ஆண்டு கண்டறியப்பட்ட மனித புதைக்குழிகள் ஆட்கடத்தல் விவகாரம் குறித்து மலேசியாவில் பெரும் அதிர்ச்சியினை உண்டாக்கியது. அத்துடன் சர்வதேச ஆட்கடத்தல் புள்ளிவிவரங்களில் ‘மலேசியா’ முதன்மையான நாடாக அடையாளப்பட்டது.
மலேசியாவிற்கு சட்டவிரோதமாக கடத்திவரப்படும் வெளிநாட்டினர், பெண்கள், குழந்தைகளை உள்ளடக்கிய அகதிகள் பெருமளவிலானோர் பாலியல் தொழில், வீட்டு வேலை, விவசாயம், தொழிற்சாலைகளில் முறையான அனுமதியின்றி-சம்பளமின்றி வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனால், மலேசியாவை நோக்கிய ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையிலேயே, ஆட்கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தை மலேசியா உருவாக்கியுள்ளது. இது மலேசிய துணைப் பிரதமர் அகமத் ஜாஹித் ஹமிதினுடைய திட்டம் எனப்படுகின்றது. இந்த முயற்சியினை மலேசிய மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன.
0 கருத்துகள்:
Post a comment