தொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே
தூண்டலாமென சமூதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் எச்சரித்துள்ளார்.
கொரோனா தொற்று தொடர்பில் பிறப்பிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கு மத்தியில் மட்டக்களப்பில் 15 இற்கும் மேற்பட்ட தற்கொலைகள் நிகழ்ந்திருந்ததாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் இருந்த சடலம் செட்டி என அழைக்கப்படும் 82 வயதுடைய வயோதிபர் ஒருவருடையது என தெரியவருகிறது. இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள் என்றும் இவர் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தவர் எனவும் தெரியவருகிறது.
முன்னதாக யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று அதிகாலை காணப்பட்டுள்ளது.டிருந்தது. மயிலங்காடு பகுதியில் வசிக்கும் மோட்டார் சைக்கிள் தரகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துகள்:
Post a comment