இலங்கை

கருங் குளவிகள் கடுமையாக தாக்கி தாய், மகள் பாதிப்பு


கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த தாயையும், மகளையும் கருங் குளவிகள் தாக்கியுள்ளன.

இதில் பாதிக்கப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கொடிகாமம் வேவில் பகுதியில் இன்று (02) இடம்பெற்றுள்ளது.

39 வயதுடைய தாயும், அவரது 7 வயதுப் பெண் பிள்ளையும் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About யாழவன்

0 கருத்துகள்:

Post a Comment