இலங்கை

கறுப்பு ஜீலை நினைவேந்தல்!! -யாழ்.பல்கலையில்!

சிறிலங்காவின் சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் மிக மோசமாக தாக்கப்பட்டது நினைவு கூரும் ஜீலை 23 நாள் கறுப்பு ஜீலை நினைவு தினம் இன்று தமிழர் தாயகத்தில் உள்ள பல்வேறு இடங்களிலும் நடைபெற்றிருந்தன. இதன்படி யாழ் பல்கலைக்கழக கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள நினைவுத் தூபியில் இந் நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை நண்பகல்இடம்பெற்றது.

பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறை பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களும் சடரேற்றி வணக்கம் செலுத்தி நினைவு கூர்ந்தனர்.இந் நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஊழியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

About தாயகம்

0 கருத்துகள்:

Post a Comment