Header Ads

test

நீட்தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு – தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

நெக்ஸ்ட் தேர்விற்கு தமிழக சட்டசபையில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து தமிழக  சட்டசபையில்  தி.மு.க சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
குறித்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய மு.க.ஸ்டாலின், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கொண்டுவரவுள்ள நெக்ஸ்ட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும்.
இதற்காக மத்திய அரசு கொண்டுவரவுள்ள தேசிய மருத்துவ கழக சட்டமூலத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்.
மருத்துவக் கல்லூரிகளை இயக்குவது மாநில அரசின் உரிமை. அதை விட்டுக் கொடுக்கக் கூடாது. விட்டுக்கொடுத்தால், மாநில மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு இயக்கும் சூழ்நிலை உருவாகும் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நெக்ஸ்ட் தேர்வை அ.தி.மு.க.வும் எதிர்க்கிறது. இந்த தேர்வு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது என ஏற்கனவே பதிவு செய்துள்ளோம் என்றார்.
இந்நிலையில், குறித்த தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் கவனயீர்ப்பு ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments