Video Of Day

Breaking News

ரயில் கடவை அமைத்து தருமாறு கோரி போராட்டம்!

திருமுறிகண்டி பகுதியில் ரயில் கடவை அமைத்து தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) காலை ரயில் பாதையை மறித்து  மேற்கொள்ளப்பட்டது.
பிரதேசத்தைச் சேர்ந்த பொது அமைப்புக்கள் மற்றும் பலர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதுடன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். குறித்த அதிகாரிகளிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைவில் ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தமது பிள்ளைகள் ஆபத்தில்லாமல் சென்று வருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் இதன்போது, கோரிக்கை விடுத்தனர்.
திருமுறிகண்டி – அக்கராயன்குளம் வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் சமிக்ஞை கட்டமைப்பு செயற்படாமையினால் மக்கள் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களையும் ஆபத்தையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்தோடு, இக்கடவையானது பல கிராமங்களுக்குச் செல்லும் முக்கிய பகுதியில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments