Header Ads

test

27ஆண்டுகளின் பின் நளினி சிறையில் இருந்து வெளியே வந்தார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில்தண்டனை பெற்று கடந்த 27ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்இருக்கும் நளினிக்கு அவரது மகள் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறையில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் நிலையில் தனது மகள் திருமணத்திற்கான வேலைகளை செய்ய வேண்டும் எனக் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ‘ எனது தூக்குத்தண்டனை 2000 ஆம் ஆணடு ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன் பின் சிறையில் இருக்கும் ஆயுள்கைதிகளில் 10 ஆண்டுக்கும் சிறை தண்டனை அனுபவித்தர்கள் 3700 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரோல் வழங்க விதிகள் உள்ளன. ஆனால் எனக்கு இதுவரை ஒருமுறைக் கூட பரோல் வழங்கப்படவில்லை. எனவே எனது மகளின் திருமணத்தை முன்னிட்டு எனக்கு 6 மாத காலம் பரோல் வழங்கவேண்டும்’ என நளினி தெரிவித்துள்ளார்.
இதை எதிர்த்து நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய அவருக்கு ஒருமாதம் பரோல் வழங்க சிறை நிர்வாகம் ஒத்துக்கொண்டுள்ளது. இந்நிலையில் இப்போது அவர் தங்க இருக்கும் இருப்பிடம் பற்றிய விசாரணை நடந்து வருகிறது. நளினிக்கு அவரது தாய் பத்மாவும், இன்னொரு உறவினர் பெண்ணும் ஜாமீன் வழங்கியுள்ளனர். இந்த ஒருமாதக் காலத்தில் நளினியின் மகள் ஹரித்ராவின் திருமணம் வேலூரிலேயே நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் இன்று பரோலில் வெளியே வந்தார்.

No comments