மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர் – பொலிஸார் வலைவீச்சு!
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று (செவ்வாய்க்கிழமை)மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்தநபர் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனை அடுத்து தப்பி ஓடிய குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேடிவருகின்றனர். மேலும் குறித்த நபரை கைது செய்ய திறந்த பிடியானை உத்தரவினையம் நீதவான் பிறப்பித்துள்ளார்.
Post a Comment