Header Ads

test

காஷ்மீரில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி குறித்த வழக்கின் முக்கிய அறிவிப்பு

காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பழங்குடியின சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு பின் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 10ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த வழக்கு தொடர்பாக 8பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
அத்துடன் இது குறித்த வழக்கு விசாரணை ஆரம்பத்தில் கத்துவா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பின்பு பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணையின் போது, அந்தச் சிறுமியின் உடற்கூற்று ஆய்வு அறிக்கை உட்பட தடயவியல் ஆய்வு அறிக்கை ஆகியவையும் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு பற்றிய விசாரணைகள் யாவும் நிறைவடைந்துள்ளதாகவும், வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் 10ஆம் திகதி வெளியிட சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

No comments