Header Ads

test

உள்ளூராட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க அரசு தயங்குகிறது – திருமாவளவன்

நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாகவே அ.தி.மு.க அரசு உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதில்  தயக்கம் காட்டுகிறது எனவும், விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
பெரம்பலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “உள்ளுராட்சி தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இந்த தேர்தலை நடத்துவதில் இனியும் காலம் தாழ்த்தாது  உடனடியாக நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தலித் மக்களுக்கான பதவியை தனி ஒதுக்கீடாக அறிவிக்க வேண்டும்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை உடனடியாக அழைத்து ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை எதிர்த்து போராடுவதற்கான கலந்தாய்வு கூட்டத்தையும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments