Header Ads

test

நான்காவது நாளாக தொடரும் வைத்தியர்களின் போராட்டம்!

மேற்கு வங்கத்தில் தமக்கான பாதுகாப்பை வழங்கக்கோரி வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நான்காவது நாளாக தொடர்கின்றது.
இதன்காரணமாக அம்மாநிலத்தின் அரச வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொல்கத்தாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் நோயாளியின் உறவினர் ஒருவர் வைத்தியர் ஒருவரை தாக்கியதன் காரணமாக மருத்துவர்களுக்கான  பாதுகாப்பை வழங்கக்கோரி போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வைத்தியர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதன்காரணமாக டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் சுகாதார சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த போராட்டம் இடம்பெற்ற எஸ்.எஸ்.கே.எம் வைத்தியசாலைக்கு அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் அரசியல் சதி இருப்பதாக தெரிவித்த அவர், 4 மணிநேரத்திற்குள் வைத்தியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments