Header Ads

test

நிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்!

நடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மாவட்ட மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக நிலத்தடி நீர்மட்ட நிலவரம் குறித்து, மத்திய நிலத்தடி நீர் ஆய்வுத்துறை மாதந்தோறும் அரசுக்கு அறிக்கை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 2018 மே மாத நிலவரத்துக்கும், இந்த வருடம் மே மாத நிலவரத்துக்குமான நிலத்தடி நீர்மட்டம் ஒப்பீடு பட்டியல் அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழகத்தில் பெரம்பலூர் உள்பட 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதில், அதிகபட்சமாக பெரம்பலூரில் 13.77 மீட்டர் அதாவது 52 அடிக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது எனவும், கடந்த ஆண்டை காட்டிலும், நிகழாண்டில் 4.65 மீட்டர் அதாவது 15 அடிக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக பராமரிக்காதது, நீர்நிலைகள் பராமரிப்பில் மெத்தனப் போக்கு உள்ளிட்ட பல காரணங்களால் நிலத்தடி நீர்மட்டமானது, எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளது.
இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக கீழே சென்றதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவிலான மரக்கன்றுகள் நட்டு வைத்து மழை பெறுவதோடு, அந்த மழைநீரை முறையாக சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும், ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை பராமரிக்க தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments