மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா!
மக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் ஓம் பிர்லா, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்கும் தீர்மானத்தை பிரதமர் மோடி மக்களவையில் முன்மொழிந்தார்.
இதனை அடுத்து தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலுவும் அ.தி.மு.க. சார்பில் ரவீந்திரநாத்தும் அவரை முன்மொழிய சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Post a Comment