Header Ads

test

அரசியலமைப்பை மீண்டும் மீறினார் மைத்திரி

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதை அடுத்து அந்தபதவிக்கு பதில் அமைச்சர்களை நியமைத்தமை அரசியலமைப்பினை மீறும் செயற்பாடு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நியமனம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதிய கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “19ஆவது திருத்தத்தின்படி உங்களுக்கு இருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் அமைச்சர்களை நியமிக்க முடியாது.
19 வது திருத்தச் சட்டத்தின் படி, அமைச்சர் ஒருவர் பதவி விலகினால் அந்த இடத்துக்கு மற்றொருவரின் நியமனம் பிரதமரின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இடம்பெற வேண்டும். ஆனால், இதனை மீறி பதில் அமைச்சர்களை நீங்கள் நியமித்திருப்பது தவறானது.
அரசியலமைப்பை மீறிய உங்களின் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படலாம்” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெற்றிடமாக இருந்த அப்பகுதிகளை நிரப்புவதற்காக, ராஜித சேனாரத்தன, மலிக் சமரவிக்ரம, ரஞ்சித் மதும பண்டார ஆகியோரின் பெயர்களை ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரைத்துள்ளது. எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த வேட்பாளர்களின் பட்டியலை நிராகரித்து வேறு உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையின் போதும் அரசியலமைப்பை மீறி நாடாளுமன்றத்தை கலைத்திருந்தார்.
இந்நிலையில், தற்போது குறித்த நியமனங்களையும் அவர் அரசியலமைப்பை மீறி வழங்கியுள்ளார் என பிரதமர் குற்றம் சட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments