Video Of Day

Breaking News

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிமோர் தீவிலுள்ள குபாங் நகரில் இருந்து வடமேற்கில் 133 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை.
இதேவேளை, இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

No comments