Video Of Day

Breaking News

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அதன்படி அவர், இந்த மாதத்தின் இறுதிப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அவர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நாட்களில் அவர் இந்தியா, இலங்கை, ஜப்பான் மற்றும் கொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சுதந்திரமான திறந்த இந்திய பசுபிக் வலயத்தை உருவாக்கும் நோக்குடன் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இந்த விஜயத்தில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments