புதிய அரசியலமைப்பு நிறைவேறினால் நாடு அழிந்துவிடும்!
“நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட
ஆட்சி மாற்றம் காரணமாக நாடு மிகப்பெரும் 3 ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
புதிய அரசிலமைப்பு தொடர்பான நகல் வடிவே இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரும்
ஆபத்தாகும். புதிய அரசியலமைப்பை தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால்
இலங்கை என்பது இல்லாமல் போகும்”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அச்சம் வெளியிட்டுள்ளார்.
அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவி நேற்று நாடாளுமன்றில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று வெளியிட்டுள்ள முதலவாது அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளில் நாடு எதிர்கொண்டுள்ள மூன்று பெரும் ஆபத்துக்கள் என்ற தலைப்பில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இன்று விடுத்துள்ள அறிக்கையில் இலங்கை மூன்று பாரிய ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு மிகப்பெரும் 3 ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
பொருளாதாரம் எவ்வேளையிலும் கவிழக்கூடும் என்பதே முதல் ஆபத்து, கடந்த நான்கு வருடங்களில் தேசிய கடன் ஐம்பது வீதத்தினால் அதிகரித்துள்ளது.
19வது திருத்தத்தின் காரணமாக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கும் ஆபத்து காணப்படுகின்றது. அதுவே இரண்டாவது ஆபத்தாகும்.
19வது திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றத்தை எந்த சூழ்நிலையிலும் கலைக்கமுடியாது. வரவு செலவு திட்டத்தில் அரசு தோற்கடிக்கப்பட்டாலும்,நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமுடியாது.
புதிய அரசிலமைப்பு தொடர்பான நகல்வடிவே இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது ஆபத்தாகும். புதிய அரசியலமைப்பை தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும்.
புதிய அரசமைப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிகின்றோம்.
இந்த ஆபத்துக்கள் யதார்த்தமாவதை தடுப்பதற்கான அரசியல் சக்தியாக எனது தலைமையிலான எதிர்கட்சி கூட்டணியே காணப்படுகின்றது – என்றுள்ளது.

Post a Comment