ஜெர்மனியில் தமிழர்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து ! சடடத்தரணிகள் எச்சரிக்கை,
இலங்கையில் இனப்பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்தும் , வடகிழக்கு போர்ச்சூழலால்
பல இலட்ச்சக்கணக்கான தமிழர்கள் அகதி அந்தஸ்து கோரியும், உயிர்த்தஞ்சம்
வேண்டியும் பல்வேறு புலம்பெயர் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருந்தார்கள்.
குறிப்பாக ஈழத் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவில் புலம்பெயர்ந்தது
வாழ்ந்து வருவது யாவரும் அறிந்ததே. இதேநேரம் 2009 முள்ளிவாய்க்கால்
இனவழிப்புக்கு பின்னரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்
புலம்பெயர்ந்துள்ளனர். இது தற்போது வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆனால் தற்போதைய காலத்தில் அங்கீகரிக்கக்கப்பட்ட அகதிகளை விட அங்கீகரிக்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்குப் பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
அது ஒருபுறமிருக்க அண்மையில் ஜெர்மனியில் புகலிடம் கோரியிருந்த இரு தமிழ் இளஞர்கள் யேர்மனியக் குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியது அனைவரும் அறிந்ததே. ஆனால் உண்மையில் அதை விட கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமெனலாம்.
கைதானவர்கள் இருவரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் எனக் கூறப்பட்டுள்ளது. அண்மையில் கைதான ஒருவர் இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸமன் கதிர்காமர் படுகொலை தொடர்பாகவும், மற்றறொருவர் 16 இலங்கை இராணுவத்தை படுகொலை செய்தது தொடர்பில் கைது செய்யபட்டிருந்தமை ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வலம்வந்தன.
கைது செய்யப்பட்ட இவ்விருவரும் தங்களில் அகதி அந்தஸ்து கோருவதற்கான விண்ணப்பங்களில் அவர்கள் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலிருந்தே கைது செய்யப்பட்டார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டியது.
விடுதலைப்புலிகளால் ஒத்துக்கொள்ளாத அல்லது அவர்கள் தொடர்புபடாத சம்பவங்களை தங்களுடைய புகலிடக் கோரிக்கைக்கு சாதமாக (தவறாக) வழங்குவதன் மூலம் இலகுவில் அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற மனநிலையின் வெளிப்பாடே இக்கைது நடவடிக்கைக்கு முக்கிய காரணப் புள்ளிகளாக அமைந்துள்ளன.
16 இராணுவத்தைக் படுகொலை செய்த சம்பவத்துடன் தானும் சம்பந்தப்பட்டேன் என்ற புனைக் கதையை உறவினர் ஒருவர் உருவாக்க அதற்கு உயிரோட்டம் கொடுத்து அகதி அந்தஸ்துக்குக்குரிய வாக்குமூலத்தை வழங்கிய முதலாம் நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்றவர் இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸமன் கதிர்காமர் படுகொலையைத் நானே செய்தேன் என்று போலி வாக்கு மூலம் வழங்கியது மட்டுமல்லாமல் காணுபவர்களுக்கு எல்லாம் நான் தான் லக்ஸ்மன் கதிர்காமரைப் போட்டுத் தள்ளினான் என்று தன்னை பொியவர் என காண்பிக்க முற்பட்டதான் விளைவு அவரை சிறைக்குள் தள்ளியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்துள்ள வேளையில் தனிநபர்களுடைய வாக்குமூலங்கள் ஒரு தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை போராடடத்தின் மீது சர்வதேச சமூகம் வைத்துள்ள நம்பிக்கையினை சிதறடித்து சந்தேகக் கண்கொண்டு பார்க்க வழிவகுப்பதோடு, எதிர்கால புலம்பெயர் தமிழர்களின் அரசியல் செயற்பாட்டுக்கும் முட்டுக்கட்டையாகவும் அமைந்துவிடக்கூடிய வாயப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
இலங்கை அரசாங்கம் முன்னாள் போராளிகள் பலரை குற்றவாளிகளாக சித்தரித்து தங்கள் நீதிமன்றங்கள் மூலம் கடூழிய சிறைத்தண்டனைகளை வழங்கி வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.
அவ்வாறான சூழலில் ஜெர்மனியில் அகதி அந்தஸ்து கோரிய பலர் கைது செய்யப்படுவதுடன், பலரது உண்மை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் அகதி முகாங்களுக்கு சென்று மேலதிக விசாரணையில் ஜேர்மன் குடிவரவு அதிகாரிகள் களமிறங்கியுள்ளமை தமிழ் அகதிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதேநேரம் ஏற்கனவே அகதி அந்தஸ்து (வீசா) வழங்கப்படடவர்களின் அகதி அந்தஸ்து கோரிய வாக்குமூலங்களை மீளவும் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனவே வழக்கு நிலுவையில் உள்ள அகதிகளுக்கும், இனிவரும் அகதிகளுக்கும், அண்மையில் அகதி அந்தஸ்து வழங்கப்படடவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளனர் ,
உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி சட்ட சிக்கல்களுக்கும் மாட்டிக்கொள்ளாமல் சரியான ஆதாரங்களையும் , தகவல்களையும் வழங்கி நேர்மையாக பிரச்சனைகளை தெரிவித்து அகதி அந்தஸ்து பெற்றுக்கொள்ளவது உங்களுக்கு நல்லதோடு எதிராக்காலத்தில் வர இருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் நன்மை கொடுக்கும் என நம்புகிறோம் .
டப்ளின் சடடத்தினால் ஒருபுறம் , நாட்டு நிலை , தனிப்படட உயிர் அச்சுறுத்தல் தொடர்ப்பன போதிய ஆதாரங்கள் இல்லாமையினால் பல்லாயிரக்கணக்கான தமிழ் அகதிகள் இன்னும் பல்வேறு நாடுகளில் தற்காலிக குடியுரிமை கூட வழங்கப்படாத நிலைகளில் வாழ்த்து வருகிறார்கள்,
எனவே ஜெர்மனின் இந்த நடவடிக்கைகள் மற்றைய நாடுகளுக்கும் பரவாமல் இருப்பதற்கும், தமிழ் தேசிய இனத்தின் மீதுள்ள மதிப்பையும் எமது போராட்த்தின் உண்மைத் தன்மயையும் பேணிக்காப்பது ஒவ்வொரு தமிழ் புகலிடக் கோரிக்கையாளரின் கடமையாகும்.

Post a Comment